/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட உதவி வக்கீல்பணிக்கு ஆட்கள் தேர்வு
/
சட்ட உதவி வக்கீல்பணிக்கு ஆட்கள் தேர்வு
ADDED : ஆக 30, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவையில் சட்ட உதவி வக்கீல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், துணை சட்ட உதவி வழக்கறிஞர் பணிக்கு, இரண்டு காலியிடம், அலுவலக உதவியாளர் பணிக்கு இரண்டு காலியிடம் உள்ளது. இப்பணியிடத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர், வேலைக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற விவரங்களை, கோவை மாவட்ட நீதிமன்ற இணைய தளத்தில்( http://districts.ecourts.gov.in/coimbatore) தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.