/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் லைசென்ஸ் புதுப்பித்தல் பணி 'ஜரூர்'
/
பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் லைசென்ஸ் புதுப்பித்தல் பணி 'ஜரூர்'
பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் லைசென்ஸ் புதுப்பித்தல் பணி 'ஜரூர்'
பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் லைசென்ஸ் புதுப்பித்தல் பணி 'ஜரூர்'
ADDED : ஆக 23, 2024 01:29 AM

கோவை;கோவையில், பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர்களுக்கு புதுப்பித்தல் உரிமம் மற்றும் புதிதாக பதிவு செய்தோருக்கான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுமானத் துறையில் ஈடுபடும் பொறியாளர்களுக்கு, 2019ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இந்நிலையில், 2019ம் ஆண்டு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் ஏற்படுத்தப்பட்டு, கட்டுமான பொறியாளர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பித்தால் போதும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதனால், இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமம் தவிர்க்கப்பட்டது.
பதிவு பெற்ற கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டமைப்பு பொறியாளர்கள், கட்டட அபிவிருத்தியாளர்கள் உட்பட தொழில் சார்ந்த வல்லுனர்கள், மாநகராட்சி/ நகராட்சியில் பதிவு செய்வது தொடர்பாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, 2019ம் ஆண்டில் பதிவு பெற்ற கட்டட பொறியாளர்கள், நடப்பாண்டு புதுப்பிக்க வேண்டும். கட்டடவியல் துறையில், பி.இ., -எம்.இ., - டிப்ளமோ முடித்தவர்கள் என, அனுபவத்தின் அடிப்படையில், 'கிரேடு' பிரிக்கப்பட்டு அவர்களின் பதிவு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதிவை புதுப்பிக்க, அதற்குரிய தொகையான ரூ.5,000 மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு, பதிவை புதுப்பித்து வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது பதிவு புதுப்பித்தல் வழங்கப்பட்டு வருகிறது;
350 பேருக்கு லைசென்ஸ்
ஏற்கனவே பதிவு செய்து, தற்போது புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்த கட்டுமான பொறியாளர்கள், 167 பேர் மற்றும் புதிதாக பதிவு செய்ய விண்ணப்பித்த, பி.இ., மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் 183 பேர் என, 350 பேருக்கு, உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- குமார்,
நகரமைப்பு அலுவலர், கோவை மாநகராட்சி.

