/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கூகுள் பிளே'வில் இருந்து 'மைவி3' செயலி நீக்கம்
/
'கூகுள் பிளே'வில் இருந்து 'மைவி3' செயலி நீக்கம்
ADDED : ஆக 10, 2024 11:47 PM
கோவை;மைவி3 செயலி கூகுள் பிளேவில் இருந்து நீக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஆனந்தன், 51, என்பவர், 'மை வி3 ஆட்ஸ்' என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இவரின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பதிவிடப்படும் விளம்பர வீடியோக்களை பார்த்தால், ரூ.5 முதல் ரூ.1,800 வரை பணம் கிடைக்கும் என, மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
மாநகர சைபர் கிரைம் போலீசார், சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் தடை சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத வைப்பு நிதித் திட்டங்கள் தடை சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், செயலியின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது. அதன்படி, சரணடைந்த சக்தி ஆனந்தன், சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில், மைவி3 நிறுவன அலுவலகம் மூடப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் செயலி, 'கூகுள் பிளே' ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக செயலி இயங்காமல் முடங்கியுள்ளது. செயலி நீக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.