/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றிய வளாகத்தில் உள்ள பாறை கல்லை அகற்றுங்க!
/
ஒன்றிய வளாகத்தில் உள்ள பாறை கல்லை அகற்றுங்க!
ADDED : ஜூன் 26, 2024 09:40 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பாறை கல்லை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகத்திற்கும் ஒன்றிய அலுவலகத்திற்கும் இடைப்பட்ட வழித்தடத்தில் புதர் சூழ்ந்து இருந்தது. தற்போது இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது.
சுத்தம் செய்த இடத்தில் ஒரு பாறை கல் உள்ளது. இந்த கல்லானது சுத்தம் செய்த இடத்தில் இருந்து உயரமான பகுதியில் உள்ளது. சுத்தம் செய்த இடத்தின் அருகில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் இந்த கல் உண்டு கீழே விழுவற்கு வாய்ப்புள்ளது.
தற்போது மழை பொழிவு இருப்பதால், கல் இருக்கும் இடத்தில் உள்ள மண் ஈரமாகி, சரிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழித்தடத்தை மக்கள் பலர் பயன்படுத்துகின்றனர். எனவே, கல்லை உடனடியாக அகற்ற வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.