/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள் அகற்றம்
/
மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள் அகற்றம்
ADDED : மே 24, 2024 10:59 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், வீடுகள், கடை உள்ளிட்ட கட்டடங்களுக்கான மின் இணைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் மரங்கள் வளர்ந்துள்ளன. தற்போது, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களின் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர, மின் கம்பிகளை உரசும், சூழ்ந்து காணப்படும் மரக்கிளைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் மழை காரணமாக, மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதிப்படைந்த கம்பங்கள் மற்றும் கம்பிகளை சரி செய்து வருகின்றனர்.
நகரின் பல இடங்களில் மின் கம்பிகளைச் சூழ்ந்து மரக்கிளைகள் காணப்படுகிறது. இதனால், மழை மற்றும் காற்று வீசும் போது, அடிக்கடி மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்கம்பிகளில் உரசி ஆபத்தை விளைவிக்கும் வகையிலான மரக்கிளைகளை மட்டும் வெட்டி அகற்றப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

