ADDED : ஜூலை 26, 2026 06:41 PM
சூலுார்: ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என, சி.பி.எஸ்., ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நலச் சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம், சூலுாரில் நடந்தது. மாநில தலைவர் சென்ராம், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்று சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
கடந்த 2003 ஆண்டுக்கு பின் சி.பி.எஸ்., திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2025 ஆண்டு வரை சி.பி.எஸ்., திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணிக்கொடை, மாதாந்திர நிரந்தர ஓய்வூதியம், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2025க்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத்தலைவர் குணசேகரன், துணை பொதுச் செயலாளர் ஸ்டார்லெட் விமலா மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
