/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய யூடர்ன் வளைவுகள் அமைக்க கோரிக்கை
/
புதிய யூடர்ன் வளைவுகள் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 07, 2025 08:13 PM

பெ.நா.பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி உள்ள துடியலூர் பகுதியில் புதிதாக யூடர்ன்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி துடியலூர் பகுதியில் உள்ள, 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம், 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா ஆகியோர் போக்குவரத்து காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் வெள்ளக்கிணறு பிரிவு முதல் துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள யூடர்ன்களை வழிகளை மீண்டும் ஆய்வு செய்து, ரோடு அகலமாக உள்ள இடங்களில் புதிய யூடர்ன்களை அமைக்க வேண்டும். யூடர்ன் வழிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சாலையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வளைவு சுவர்களை அகற்ற வேண்டும். சரவணம்பட்டியில் உள்ள, 4 கல்லூரிகளுக்கு செல்ல தடாகத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் துடியலூர் பஸ் ஸ்டாண்டில் அதிக அளவில் கூடுவதால், காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும் கூடுதலாக மேற்கண்ட இடங்களில் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
டியூகாஸ் பெட்ரோல் பங்க் அருகே சாலை விபத்துக்கள் அதிகளவு நடப்பதால், அந்த இடத்தில் டிவைடர் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், துடியலூரில் வேணுகோபால் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள யூடர்ன் வளைவால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.