ADDED : ஜூன் 23, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
டவுன்ஹால்: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி, கமிஷனர் ரவி தேஜா மக்களின் குறைகளை கேட்டனர். 75 மனுக்கள் பெறப்பட்டன.
ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும், வா.49 கந்தசாமி லேஅவுட் பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும், மகப்பேறு மருத்துவமனைகளின் கழிவு சுத்திகரிக்காமல் ஓடைகளில் கலப்பதை தடுக்க வேண்டும், குப்பையை வீடு வீடாக சென்று சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும், பொது கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
