/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாரத்தில் இரண்டு நாட்கள் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
/
வாரத்தில் இரண்டு நாட்கள் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
வாரத்தில் இரண்டு நாட்கள் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
வாரத்தில் இரண்டு நாட்கள் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
ADDED : ஆக 04, 2024 10:02 PM
வால்பாறை ; வால்பாறை, எஸ்டேட் பகுதியில் வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் ரேஷன் கடை திறக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 16,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. 47 ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சமீபகாலமாக, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகள் ரேஷன் கடையை தாக்குகின்றன. இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக வழங்கப்படுவதில்லை.
யானைகள் நடமாடும் பகுதியில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடிவதில்லை.
தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறை தாலுகாவில் யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் என, மாதத்தில் எட்டு நாட்கள் ரேஷன் கடை திறந்தால் மட்டுமே தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை முழுமையாக பெற முடியும்.
எனவே, எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை, வாரத்தில் இரண்டு நாட்களாவது திறக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.