ADDED : ஜூலை 17, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவில்களில் தரிசன கட்டணம் குறைக்க கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் தலைவர் ஜெயராமன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை:
கோவில்களில் தரிசன கட்டணம், பூஜை மற்றும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கட்டண உயர்வை குறைக்க வேண்டும். நன்கொடையாளர் பிரிவில் தட்கல் முறையில், 25 சதவீத கட்டண உயர்வை பரிசீலிக்கலாம்.
தரிசனம், பூஜை, இதர சேவைக்கான முன்பதிவுகளை ஆன்லைன் அல்லது கோவில் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட முன் பதிவு மையம் வாயிலாக மட்டுமே செயல்படுத்த வேண்டும். இதனால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் ஒழியும்.
