/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை
/
கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை
கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை
கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க கோரிக்கை
ADDED : மே 09, 2024 04:28 AM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை, பூண்டி கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில்களுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையும் துவங்கியுள்ளதால்,பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள், கோடை வெயிலின் தாக்கத்தால், கோவில் வளாகங்களில் நிழல் இல்லாததால், நிழல் உள்ள பகுதியை தேடிச்சென்று, ஒதுங்கி நின்று வருகின்றனர்.
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, கோவில் வளாகங்களில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.