/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்நிலைகளை சுத்தம் செய்து பாதுகாக்க தீர்மானம்! கிராமசபை கூட்டத்தில் நிறைவேறியது
/
நீர்நிலைகளை சுத்தம் செய்து பாதுகாக்க தீர்மானம்! கிராமசபை கூட்டத்தில் நிறைவேறியது
நீர்நிலைகளை சுத்தம் செய்து பாதுகாக்க தீர்மானம்! கிராமசபை கூட்டத்தில் நிறைவேறியது
நீர்நிலைகளை சுத்தம் செய்து பாதுகாக்க தீர்மானம்! கிராமசபை கூட்டத்தில் நிறைவேறியது
ADDED : ஆக 15, 2024 11:47 PM

பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட 118 ஊராட்சிகளில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 26 ஊராட்சிகளில், பெண்கள், 2,553 பேர் உட்பட, மொத்தம், 4,708 பேர் பங்கேற்றனர். மொத்தம், 701 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், ஆண்கள், 1,710 பேர்; பெண்கள், 1,911 என மொத்தம், 3,621 பேர் பங்கேற்றனர். கிராம சபையில், 479 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொள்ளாச்சி கோட்டத்தில் தெற்கு மற்றும் ஆனைமலையில் உள்ள, 45 ஊராட்சிகளில், 1,180 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம், 8,329 பேர் பங்கேற்றனர்.
ரகசிய கூட்டம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
ஆனால், எத்தனை ஊராட்சிகள் கூட்டம் நடந்தது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அதிகாரிகள், எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் ரகசியம் காத்தனர்.
உடுமலை
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்து ஒப்புதல் பெறுதல், துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய நிர்வாகம் சார்பில், கூட்டங்களை கண்காணிக்க பற்றாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கிராம சபையில், 1,567 ஆண்கள்; 2,470 பெண்கள் பங்கேற்றனர்; மொத்தம், 702 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளில், கிராம சபைக்கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியம், பியூலா எப்சிபாய் தலைமை வகித்தனர்.
துாய்மை பாரத திட்டம், தேசிய வேலை உறுதி திட்டப்பணிகள் உட்பட 1,043 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக, 2,988 ஆண்கள், 3,831 பெண்கள் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி செயலாளர்கள் வரவு செலவினங்கள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் தெரிவித்தனர்.
கிராமங்களில் தண்ணீர், ரோடு, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், நீர்நிலைகள் சுத்தம் செய்து பாதுகாத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில், 2,422 ஆண்கள் மற்றும் 2,920 பெண்கள் என, மொத்தம், 5,342 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில், 894 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நிருபர் குழு -