ADDED : ஜூலை 31, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது.
தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நாகராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் தேவராஜ், நிர்வாகி சிங்காரவேலு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசாணை, 123 (நிதித்துறை) ரத்து செய்ய வேண்டும்; காப்பீட்டு சந்தா தொகையை தன்னிச்சையாக, 497 ரூபாயில் இருந்து, 644 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர் சங்கங்களை அழைத்து பேசி விவாதித்து திருத்திய அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.
