ADDED : ஜூலை 19, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், கோவை எம்.பி., ராஜ்குமார், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகள் ஆலோசிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கனிமவளம், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 17 துறைகள் பங்கேற்றன.
கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
