/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்
/
சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 07, 2024 12:32 AM

மண் சாலையால் அவதி
சரவணம்பட்டி, வி.ஐ.பி., சென்ட்ரல் டவுன், ஜி.கே.எஸ்., நகரில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. தார் முழுவதும் பெயர்ந்து மண்ணாக காட்சியளிக்கிறது. மேடு, பள்ளங்களாக இருக்கும் சாலையால், வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலத்திற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜோதி, சரவணம்பட்டி.
மறுபுறம் கசிவு
தண்ணீர் பந்தல் முதல் இ.பி., அலுவலகம் செல்லும் சாலையில், குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட சாலை,பணிமுடிந்தும், சீரமைக்கவில்லை. குழிகள் வெறும் மண் கொண்டு மூடப்பட்டதால், சில நாட்களிலேயேஇரண்டு அடிக்கு குழி ஏற்பட்டுவிட்டது. குழாய் இணைப்புகளில் தண்ணீர் கசிவும் உள்ளது.
- லோகநாதன், பீளமேடு.
கடும் துர்நாற்றம்
நீலிக்கோணாம்பாளையம், 59வது வார்டு, பழைய தபால் அலுவலகம்எதிரில், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. களைச்செடிகள், குப்பை நிரம்பியிருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சேகர், நீலிக்கோணாம்பாளையம்.
தினமும் விபத்து
ராமநாதபுரம், 63வது வார்டு, கன்னிகா பரமேஸ்வரி நகர், சாலை முழுவதும் பள்ளங்களாக காணப்படுகிறது. மோசமடைந்த சாலையால் தினமும் விபத்து ஏற்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலை அமைத்து தரக் கோரியும் நடவடிக்கையில்லை.
- சுகன்யா, ராமநாதபுரம்.
திறந்தவெளியில் கழிவுநீர்
வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு, கருப்புசாமி முதலியார் வீதி சந்திப்பில், சிலர் வீடுகளிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். சாலையில் ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் செல்லும் போது நடந்துசெல்பவர்கள் மீதுகழிவுநீர் தெறிக்கிறது.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
சாலையில் விழும் கிளைகள்
காந்திபார்க் அருகில், சலிவன் வீதியில், சாலையோரத்தில் மரம் ஓன்று காய்ந்து, பட்டுப்போன நிலையில் உள்ளது. சின்ன சின்ன கிளைகள் அடிக்கடி சாலையில் விழுகிறது. சாலையில் செல்வோர் மீது கிளைகள் விழக்கூடும். காய்ந்த மரத்தை பாதுகாப்பாகஅகற்ற வேண்டும்.
- சங்கர், காந்திபார்க்.
சீரமைக்கப்படாத ரோடு
மேட்டுப்பாளையம் ரோடு, ஹனுமன் கோவில் எதிரே, சீரமைப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும்பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைந்து பணியை முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
- ரங்கராஜ், திருச்சி ரோடு.
குப்பை தேக்கம்
தண்ணீர்பந்தல் முதல் கொடிசியா ரோடு, பொன்மணி கிரைண்டர் கம்பெனி அருகில் சாலையோரம்பெருமளவு குப்பை தேங்கிக்கிடக்கிறது. சுகதார சீர்கேடு ஏற்படுவதால் விரைந்து குப்பையைஅகற்ற வேண்டும்.
- தங்கவேல், கொடிசியா ரோடு.
சுகாதார சீர்கேடு
காந்திபுரம், எட்டாவது வீதியில், சுகாதாரப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. பல வாரங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல், தேங்கி நிற்கிறது. சாலையோரம் மலை போல குப்பையும் தேங்கியுள்ளது. சுகாதார சீர்கேட்டால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- சண்முகவேல், தொட்டிபாளையம்.