/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தராபுரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்; சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் குமட்டுகிறது நாற்றம்
/
சுந்தராபுரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்; சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் குமட்டுகிறது நாற்றம்
சுந்தராபுரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்; சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் குமட்டுகிறது நாற்றம்
சுந்தராபுரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்; சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் குமட்டுகிறது நாற்றம்
ADDED : பிப் 26, 2025 04:21 AM

வாய்க்காலில் ஆக்கிரமிப்பு
வெள்ளலுார், வாய்க்காலில் தனி நபர்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மழை சமயங்களில் இதனால் பிரச்னை ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. வாய்க்கால் குறுகலாக்கப்படுவதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலசுப்பிரமணியம், வெள்ளலுார்.
துரத்தும் நாய்கள்
பி.என்.புதுார், நியூ தில்லை நகர், எட்டாவது கிராஸ் பகுதியில், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலையில் சுற்றுகின்றன. சாலையில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. முதியவர்கள், குழந்தைகள் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர்.
- கிருஷ்ணன், பி.என்.புதுார்.
விளக்கு பழுது
பீளமேடு, 24வது வார்டு, பி.ஆர்.புரம், சாஸ்திரி வீதியில், 'எஸ்.பி -13 பி-5' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
- செல்வநாரயணன், பீளமேடு.
கடும் துர்நாற்றம்
சுந்தராபுரம், காந்தி நகர், டைட்டன் பெயின்ட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள, கால்வாயில் தொடர்ந்து ஓட்டல் கழிவு கொட்டப்படுகிறது. திறந்த நிலையில், சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் குடியிருப்பு பகுதியில், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- ராகுல்கண்ணன், சுந்தராபுரம்.
புது ரோட்டை தோண்டியாச்சு
சிங்காநல்லுார், காமராஜர் சாலையிலிருந்து இந்திரா கார்டன் செல்லும் வழியில், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதில், ஒன்றரை மாதங்களுக்கு முன், மின் புதை வழி தடம் கோளாறு சரிசெய்வதற்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
- மகேந்திரன்,, சிங்காநல்லுார்.
குறுகலான சாலையால் நெருக்கடி
சீரநாயக்கன்பாளையம், அண்ணா வீதி மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தடுக்க, சாலையை விரிவுப்படுத்த வேண்டும். அல்லது ஒரு வழிப்பாதையாக மாற்றினால், நெருக்கடி தவிர்க்கப்படும்.
- சங்கர், சீரநாயக்கன்பாளையம்.
விளையாட்டு அரங்கத்தில் ஆபத்து
வடக்கு மண்டலம், 12வது வார்டு, மணியகாரம்பாளையம், ராக்காச்சி கார்டனில், மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. குழந்தைகள் விளையாட்டு பயிற்சிக்கு, இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். நுழைவு வாயில் துாண், பெரிய விரிசல்களுடன் சேதமடைந்துள்ளது. இரும்பு பெயர் பலகையும், துருப்பிடித்து விழும் நிலையில் உள்ளது.
- ராஜா, மணியகாரம்பாளையம்.
வீணாகும் குடிநீர்
மலுமிச்சம்பட்டி முதல் அவ்வை நகர் செல்லும் வழியில், ஜி.டி.,டேங்க் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. எதிர்வரும் கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- பாஸ்கரன், அவ்வை நகர்.
தெருவிளக்கு தேவை
மதுக்கரை மார்க்கெட், பாலத்துறை ரோடு, 25வது வார்டு மேபிள் கார்டன் பகுதியில் இதுவரை தெருவிளக்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- ரிஷப் தனஞ்சயன், மேபிள் கார்டன்.