/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்
/
என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்
என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்
என்ன, ஏது என்று தெரியாமலே விண்ணப்பங்கள் நிராகரிப்பு: புலம்பும் சாலையோர வியாபாரிகள்
ADDED : ஜூன் 01, 2024 11:28 PM
கோவை:சாலையோர வியாபாரிகள் பலரது விண்ணப்பங்கள், தகுந்தகாரணமின்றி திருப்பி அனுப்பப்படுவதால், பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசின் நோக்கமும் வீணாகிறது.
கோவை மாநகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிக் கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பிரதம மந்திரியின் 'ஆத்ம நிர்பார்' திட்டத்தில், பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா சமயத்தில் முடங்கிய தொழில்கள், மீண்டும் புத்துயிர் பெறவும், வாழ்வாதாரம் மேம்படவும் வழங்கப்பட்ட, வங்கிக்கடன் பெரிதும் கைகொடுத்தது.
கடந்தாண்டு மாநகராட்சி பகுதியில், 21 ஆயிரத்து, 619 சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இலக்கையும் தாண்டி, 26 ஆயிரத்து, 804 நபர்கள் கண்டறியப்பட்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், முதல் தவணையாக நபருக்கு ரூ.10 ஆயிரம் வீதம், 18 ஆயிரத்து, 538 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.
இரண்டாம் தவணையாக ரூ.20 ஆயிரம் வீதம், 5,230 பேருக்கும், மூன்றாம் தவணையாக ரூ.50 ஆயிரம் வீதம், 876 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, புதிதாக தொழில் ஆரம்பிக்கும் வியாபாரிகளும், கடன் உதவி கேட்டு விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது.
நோக்கம் வீண்!
'வியாபாரிகள் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை, அழைப்பு விடுத்தும் உரிய நேரத்துக்கு வரவில்லை போன்ற காரணங்களை, வங்கிகள் முன்வைப்பதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர். இதனால், மத்திய அரசின் நோக்கமே வீணாகிறது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் வங்கி உயர் அதிகாரிகளுடன் பேசி, கடனுக்காக காத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அவசியம்.

