/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு பூட்டுடைத்து நகை கொள்ளை
/
வீட்டு பூட்டுடைத்து நகை கொள்ளை
ADDED : மே 01, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாபு, 45. கடந்த, 27ம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்று விட்டு, கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, மூன்று பிளாட்டினம் செயின்கள் திருடப்பட்டிருந்தது.
* கோவை விளாங்குறிச்சி ரோடு, வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் கண்ணன், 40. குடும்பத்தினருடன் சேலம் சென்று விட்டு, கோவை திரும்பினார். வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இரு புகார்கள் குறித்தும், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

