/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
16 வயது சிறுமியுடன் காதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை
/
16 வயது சிறுமியுடன் காதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை
16 வயது சிறுமியுடன் காதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை
16 வயது சிறுமியுடன் காதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை
ADDED : மே 01, 2024 11:26 PM

போத்தனூர் : காதல் தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி, கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 23. வெள்ளலூர், மகாலிங்கபுரம் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில், பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர், 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்தனர். இருப்பினும் தொடர்பு நீடித்துள்ளது.
கடந்த, 26ம் தேதி ஜெயச்சந்திரன் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தார். அங்கு வந்த சிறுமியின் சகோதரர் சுரேந்திரன், அவரை தனது பைக்கில் ஏற்றி தடாகம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, தனது சகோதரியுடனான காதல் குறித்து, தனது நண்பர்களான காமாட்சிபுரத்தை சேர்ந்த கார்த்திக், 23, வெள்ளலூர், கோனியம்மன் வீதியை சேர்ந்த ஜெயராஜ், 23, நீலிக்கோணாம்பாளையம், தச்சன் தோட்டம் மேற்கு வீதியை சேர்ந்த அபிவிஷ்ணு, 24 மற்றும் நவீன், 20 ஆகியோருடன் சேர்ந்து, கேட்டுள்ளார்.
வாக்குவாதம் ஏற்பட்டதால், அனைவரும் சவுக்கு கட்டையால் தாக்கியுள்ளனர். மறுநாள் சுரேந்திரன், ஜெயச்சந்திரனை அவரது வீட்டில் விட்டுச்சென்றார்.
28ம் தேதி மதியம், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயச்சந்திரன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேந்திரன், நவீன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.

