/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.எஸ்.வி., மருத்துவமனை கோவை ராம்நகரில் துவக்கம்
/
ஆர்.எஸ்.வி., மருத்துவமனை கோவை ராம்நகரில் துவக்கம்
UPDATED : ஆக 21, 2024 03:09 AM
ADDED : ஆக 20, 2024 10:24 PM

கோவை:கோவையில், ஆர்.எஸ்.வி.வேலுமணி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் செயல்படும் புத்துார்கட்டு 'போன் அண்ட் ஜாயின்ட்' மையம், எலும்பு முறிவு, ஜவ்வு கிழிதல் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது. இதன் கிளை மையம், ராம்நகர், லஜபதிராய் தெருவில், ஆர்.எஸ்.வேலுமணி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையாக துவங்கப்பட்டுள்ளது. ரூட்ஸ் நிறுவனர் ராமசாமி, இம்மையத்தை துவக்கி வைத்தார்.
புத்துார்கட்டு 'போன் அண்ட் ஜாயின்ட்' மையம் மேலாண்மை இயக்குனர் வேலுமணி, டாக்டர் ஆனந்தி ஆகியோர் கூறுகையில், 'எலும்பு முறிவு மற்றும் ஜவ்வு கிழிதல், தோல் தொடர்பான பாதிப்புகள், மகளிர் தொடர்பான அனைத்து உடல் பாதிப்புகளுக்கும், இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி மற்றும் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்டவற்றுக்கும், இந்திய மருத்துவ முறைப்படி சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்' என்றனர்.
இந்நிகழ்வில், டாக்டர் சுந்தரபெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

