/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுக்கும் நெடுக்கும் ஓடுது மாடு!
/
குறுக்கும் நெடுக்கும் ஓடுது மாடு!
ADDED : ஜூன் 29, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வடவள்ளி - பேரூர் சாலையில், அஜ்ஜனூரில் காலை நேரத்தில் ரோடுகளில் மாடுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. ரோட்டில் சாவகாசமாக மேய்ந்து திரிவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
காலை நேரத்தில்தான் மாடுகள் ரோட்டில் திரிகின்றன. அஜ்ஜனூர் மற்றும் வடவள்ளியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வோர், பெரும்பாலும் இந்தப் பாதையைதான் பயன்படுத்துகின்றனர். பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.