/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்ட் ஆபீஸ்களில் தேசியக்கொடி விற்பனை
/
போஸ்ட் ஆபீஸ்களில் தேசியக்கொடி விற்பனை
ADDED : ஆக 13, 2024 01:37 AM

வால்பாறை;வால்பாறை போஸ்ட் ஆபீசில் தேசியக்கொடி விற்பனை துவங்கியது.
நாட்டின், 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் தேசியக்கொடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில், பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின் பேரில், தேசியக்கொடி விற்பனை நேற்று துவங்கியது.
வால்பாறை நகரில் உள்ள போஸ்ட் ஆபீசில் தேசியக்கொடி விற்பனையை துவக்கி வைத்து, போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி பேசும் போது, '78வது சுதந்திரதினத்தை கோலகலமாக கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இது தவிர அரசு பள்ளிகள், கல்லுாரிகள், மத்திய, மாநில அரசு அலுவலங்கள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடும் வகையில், வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் தேசியக்கொடி விற்பனை நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும், 25 ரூபாய் செலுத்தி, தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

