/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
/
சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
ADDED : ஆக 11, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்:சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மார்க்கெட் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காரமடை மேட்டுப்பாளையம் சாலையில், ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் காய்கறி மொத்த மார்க்கெட் உள்ளது. இங்கு சாம்பார் வெள்ளரி, அரசாணிக்காய், பூசனிக்காய், கறிவேப்பிலை போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மைசூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகள் கொள்முதல், செய்யப்படுகிறது.
சாம்பார் வெள்ளரியை கேரளா மக்கள் விரும்பி சாப்பிடுவதால், கேரளா வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக சாம்பார் வெள்ளரியை வாங்கி செல்கின்றனர். சாம்பார் வெள்ளரி விளைச்சல் அதிகம் என்பதால், மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால், மார்க்கெட் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ''இந்த மார்க்கெட்டில் ஏலம் விடப்படுவது இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
''சாம்பார் வெள்ளரியை கிலோ ஒன்றுக்கு ரூ.17 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.13 வரை தான் விற்பனை ஆகிறது. விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.

