/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே காய்...ஒரே இடம்...இரண்டு விலை! 'அதிசயிக்க வைக்குது' சுந்தராபுரம் உழவர் சந்தை
/
ஒரே காய்...ஒரே இடம்...இரண்டு விலை! 'அதிசயிக்க வைக்குது' சுந்தராபுரம் உழவர் சந்தை
ஒரே காய்...ஒரே இடம்...இரண்டு விலை! 'அதிசயிக்க வைக்குது' சுந்தராபுரம் உழவர் சந்தை
ஒரே காய்...ஒரே இடம்...இரண்டு விலை! 'அதிசயிக்க வைக்குது' சுந்தராபுரம் உழவர் சந்தை
ADDED : ஆக 13, 2024 01:03 AM
போத்தனூர்;சுந்தராபுரம் உழவர் சந்தையில், ஒரே காய் இரு விலைகளில் விற்கப்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலை, கஸ்தூரி நகரில் கடந்த, 13 ஆண்டுகளுக்கு மேலாக உழவர் சந்தை செயல்படுகிறது. 32 கடைகளுடன் செயல்படும் இச்சந்தையில், மதுக்கரை, நாச்சிபாளையம், செட்டிபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்,
இச்சந்தையை ஒட்டிய சுற்றுப்பகுதிகளில் வசிப்போர், தங்கள் தினசரி தேவைகளுக்கான காய்கறி வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இங்கு ஒரே காய் இரு விலையில் விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உதாரணத்திற்கு காலிபிளவர், ரூ.45, ரூ.60 என இரு விலைகளில் விற்கப்படுகிறது. விற்பனையாளர்களிடம் இதுகுறித்து கேட்டாலும் எதுவும் கூறுவதில்லை.
இவ்விலை வேறுபாடு குறித்து, சந்தையின் நிர்வாக அலுவலர் தமிழரசன் கூறியதாவது:
காய்கறிகளில் மூன்று ரகம் உள்ளன. மூன்றாம் ரகம் தரம் மிகவும் குறைந்தவை. இவை இங்கு விற்க அனுமதியில்லை. முதல், இரண்டாம் தர காய்கறிகளே இங்கு கொண்டு வரப்படுகிறது. விலை வேறுபடுவதற்கு முக்கிய காரணம் தரம்தான்.
உதாரணத்திற்கு காலிபிளவரில், ஊட்டி, ஆலாந்துறை, செம்மேடு ரகங்கள் உள்ளன. ஊட்டி காலிபிளவர் கடினத்தன்மையுடையது. விரைவில் அழுகிப்போகாது. சுவை நன்றாக இருப்பதுடன், காயும் பெரிதாக இருக்கும்.
அதுபோல் உருளைக்கிழங்கு, ஊட்டி கிழங்கு விரைவில் வேகும். எளிதாக துண்டாக்கலாம். பீட்ரூட்டை கீறினால், நல்ல சிவப்பு நிறத்தில் காணப்படும்.
பூண்டு மிகுந்த காரத்தன்மையுடன் இருக்கும். கிலோ, 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும். பிற இடங்களிலிருந்து வருபவை தரம், ருசி போன்றவை குறைவாக இருக்கும்.
'ஒவ்வொரு நாளும் உள்ளூர் சந்தைகளின் விலைகளை அறிந்து, அதற்கேற்ப இங்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பிற இடங்களில் விற்பதை விட கண்டிப்பாக விலை குறைந்தே காணப்படும். தேவையான காய்கறியை மக்களே எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

