/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; பாதுகாப்பு கேள்விக்குறி
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூன் 09, 2024 11:40 PM

குப்பையால் அவதி
பொள்ளாச்சி, ஆனைமலை ராமாபுரம் வீதி, குடியிருப்பு பகுதியில் அதிக அளவு குப்பை மற்றும் பிற கழிவு கொட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் இதை விரைவில் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -அரவிந்த், ஆனைமலை.
மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு, அண்ணாநகர் இரண்டாவது வீதியில் மின் கம்பம், கான்கிரீட் பூச்சுக்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, மின்வாரியத்துறை சார்பில் இந்த மின்கம்பதை மாற்ற வேண்டும்.
- -ஆகாஷ், கிணத்துக்கடவு.
தடுப்பு அமைக்கப்படுமா
கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் செல்லும் ரோட்டில் சோழனுார் அருகே உள்ள நீரோடை ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால், இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, இங்கு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - நவீன், கோவில்பாளையம்.
குப்பை தொட்டி வையுங்க
கிணத்துக்கடவு, பெரியார்நகர் அரசு பள்ளி சுவற்றின் வெளிப்புறத்தில் குப்பை ஏகமாக கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
- - அருண், கிணத்துக்கடவு.
சுற்றுச்சுவர் கட்டணும்
உடுமலை, ருத்ரப்பா நகரில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, வளாகச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள், ஊழியர்கள் அச்சப்பட வேண்டியதுள்ளது. எனவே, அங்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவிதா, உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, காந்திநகர் பகுதியில் குடியிருப்புகளில் தேங்கும் கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிகமான புகை பரவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காற்று வீசும் நேரங்களில் கழிவுகளிலிருந்து தீப்பொறிகளும் பறக்கின்றன. ஆபத்தான சூழலாக மாறுகிறது.
- தினேஷ், உடுமலை.
பள்ளத்தை சரிசெய்யணும்
உடுமலை, திருப்பூர் ரோடு ஏரிப்பாளையம் சந்திப்பில் ரோட்டில் 'மெகா 'சைஸ் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளம் ரோட்டின் ஓரமாக இருப்பதால் வாகனங்களை திரும்பும் போதும், ஒதுங்கிச்செல்லும்போதும் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.
- லாவண்யா, உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதில், புதர்செடிகள் வளர்ந்து, கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கழிவுகள், செடிகளை அகற்றி துார்வார வேண்டும்.
- செல்வம், உடுமலை.
விபத்து அபாயம்
உடுமலை, கணக்கம்பாளையம் எஸ்.வி.புரம் பகுதியில் குடியிருப்புகளின் அருகே வேகத்தடை தேவையில்லாத இடங்களிலும் போடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் பரீட்சமில்லாமல் வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், கணக்கம்பாளையம்.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, வ.உ.சி., வீதி பசுபதி வீதி சந்திப்பில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதுமே சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலகுமார், உடுமலை.
ரோட்டில் கழிவு நீர்
பொள்ளாச்சி, 24 வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் உள்ள ரோட்டில், கழிவு ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவு இருப்பதால், மக்கள் நலன் கருதி விரைவில் இந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும்.
- -முத்துசாமி, பொள்ளாச்சி.

