/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா?
/
தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா?
தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா?
தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா?
ADDED : ஆக 29, 2024 10:08 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்தவெளியில் தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ன. குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பணிகள், முழுமையடையாமல் உள்ளது.
சில வார்டுகளில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்க நகராட்சி கவுன்சிலர்களே தடையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மகாலிங்கபுரம் பாரதி வீதி, கோட்டூர் வழி நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே வணிகக் கடைகள், வீடுகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரம் பெரிதும் பாதிக்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: பாதாளச்சாக்கடை திட்டத்தில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.
ஆனால், இத்திட்டம் 'பெயிலியர்' என்று கூறும் சில கவுன்சிலர்கள், இணைப்பு வழங்க தடையாக உள்ளனர்.
இதனால், சில பகுதிகளில், கழிவுநீர், மழைநீர் வடிகாலில், திறந்தவெளியில் வெளியேற்றப்படுகிறது. சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரால், அவ்வழித்தடத்தில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கினறனர். தொற்று நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. முறையாக, அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச்பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். மறுப்பு தெரிவிக்கும் கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.