/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் மாற்றம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
/
அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் மாற்றம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் மாற்றம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் மாற்றம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
ADDED : பிப் 25, 2025 10:30 PM
பொள்ளாச்சி,; தமிழகத்தில், பிளஸ் 2பொதுத்தேர்வு, மார்ச், 3முதல், 25 வரை நடக்கிறது. அதேபோல, பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 5 முதல், 27 வரையும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச், 28 முதல், ஏப்., 15 வரையும் நடக்க உள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, 90க்கும் மேற்பட்ட மையங்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, 30க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அறை கண்காணிப்பாளர் முறையில் புதிதாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளி தேர்வு மையமாக இருந்தால், அங்கு, 70 சதவீதம் தனியார் பள்ளி ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளராகவும், தனியார் பள்ளி தேர்வு மையமாக இருந்தால், 70 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளராகவும் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களே தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவர். தனியார் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதில்லை.
அதேபோல, அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர், தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தின் ஆசிரியராக இல்லாததும் உறுதி செய்யப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களே துறை சார்ந்த அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர்.
அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்தாண்டு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில், நடப்பாண்டும் அதே பணியாளருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
தேர்வு நாளன்று, அதே பாட ஆசிரியர்கள் பறக்கும் படை அலுவலர் குழுவில் இடம் பெறச் செய்வதும் கிடையாது. அதன்படி, நடப்பாண்டு, அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.