/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி செயல்பட்ட ஜெபக்கூடத்துக்கு 'சீல்'
/
அனுமதியின்றி செயல்பட்ட ஜெபக்கூடத்துக்கு 'சீல்'
ADDED : ஏப் 16, 2024 11:26 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே, அனுமதியின்றி செயல்பட்ட ஜெபக்கூடத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
ஆனைமலை தெற்கு தெருவில் ஜெபக்கூடம் அமைந்துள்ளது. கடந்த, 14ம் தேதி வழிபாடு முடிந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்புக்கு உள்ளான, ஏழு பேர் உடனடியாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அங்கு மதிய உணவு சாப்பிட்ட சிவகாமி,70, என்பவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வீட்டிலேயே இறந்தார். இதுகுறித்து, ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல், செயல்பட்ட ஜெபக்கூடத்தை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். தாசில்தார் சிவக்குமார் தலைமையில், சுகாதாரத்துறை, உணவுபாதுகாப்புத்துறை, வருவாய்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஜெபக்கூடத்துக்கு 'சீல்' வைத்தனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உரிய அனுமதி பெறாமல் ஜெபக்கூடம் நடத்தியது; உணவு சாப்பிட்டவர் இறந்தது உள்ளிட்ட காரணங்களினால், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா உத்தரவின் பேரில், ஜெபக்கூடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

