/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரி வேட்பாளரை ஆதரித்து சீமான் இன்று பிரசாரம்
/
நீலகிரி வேட்பாளரை ஆதரித்து சீமான் இன்று பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 11:02 PM
நாம் தமிழர் கட்சியின் சீமான், நீலகிரி தொகுதி வேட்பாளரை ஆதரித்து, இன்று அவிநாசி மற்றும் மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாம் தமிழர் கட்சி சார்பில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக இன்று மதியம் 1:00 மணிக்கு அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாகன பரப்புரை செய்கிறார். இதையடுத்து மாலை 4:00 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நீலகிரி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இரவு 7:00 மணிக்கு சரவணம்பட்டியில் நடைபெறும் பொது கூட்டத்தில் கோவை தொகுதி வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பேசுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

