ADDED : ஜூன் 23, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
கோவை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள், புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், பீளமேடு, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இம்மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் கேஸ் வொர்க்கர், செக்யூரிட்டி, உதவியாளர் உள்ளிட்ட 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப நேற்று நேர்முகத் தேர்வு நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர்.
