/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வியில் இணைய பாதுகாப்பு சங்கரா கல்லுாரியில் கருத்தரங்கு
/
கல்வியில் இணைய பாதுகாப்பு சங்கரா கல்லுாரியில் கருத்தரங்கு
கல்வியில் இணைய பாதுகாப்பு சங்கரா கல்லுாரியில் கருத்தரங்கு
கல்வியில் இணைய பாதுகாப்பு சங்கரா கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : மார் 06, 2025 12:25 AM

கோவை:
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின், இளங்கலை கணினி அறிவியல் துறையின் சார்பில், 'கல்வியில் இணையப் பாதுகாப்பு' குறித்த, ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், கோவை மாநகர போலீஸ் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண், பெங்களூரு சி.டி.எஸ்., கல்வி இணையப் பாதுகாப்பு வல்லுனர் விஜயகுமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கருத்தரங்கில், 60 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 'மின்னணு தொழில்நுட்ப எல்லையில் கல்வியை பாதுகாத்தல்' என்ற தலைப்பில், குழு விவாதம் நடந்தது.
சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் ராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா, முதல்வர் ராதிகா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.