/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்
/
அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்
அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்
அறிமுகம் இல்லாதவர் கணக்கிற்கு பணம் அனுப்புவது சட்டவிரோதம்
ADDED : ஆக 13, 2024 05:21 AM

சென்னை: அறிமுகம் இல்லாத ஒருவரின் வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமாக பணம் அனுப்புவது, பெறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வங்கி கணக்கு ரத்து செய்யப்படுவதுடன், அதற்கு தண்டனையும் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
பிறர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க சைபர் மோசடி கும்பல் புதுப்புது வழிகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை, அவர்களது நேரடி கணக்கில் செலுத்தாமல் மற்றவர்கள் கணக்கில் செலுத்துகின்றனர். இவ்வாறாக சட்டவிரோதமாக நடக்கும் பணப்பறிமாற்றம் தண்டனைக்குறிய குற்றம் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பல், பணத்தை பொதுவாக மற்றவர்களின் வங்கி கணக்கில் செலுத்திவிடுவர். இவ்வாறாக கிடைக்கும் பணத்தை பற்றி நாம் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டவிரோதம். எனவே தெரியாத ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து வரும் பணம் குறித்து வங்கி அல்லது போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அடிக்கடி உங்களின் வங்கி பரிவர்த்தனை விபரத்தை சரி பாரத்து கொள்வது இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்க உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.