/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூத்தகுடிமக்களை கைவிட முடியாது! தடுக்க இருக்கு அரசின் திட்டங்கள்
/
மூத்தகுடிமக்களை கைவிட முடியாது! தடுக்க இருக்கு அரசின் திட்டங்கள்
மூத்தகுடிமக்களை கைவிட முடியாது! தடுக்க இருக்கு அரசின் திட்டங்கள்
மூத்தகுடிமக்களை கைவிட முடியாது! தடுக்க இருக்கு அரசின் திட்டங்கள்
UPDATED : மே 05, 2024 07:31 AM
ADDED : மே 04, 2024 11:39 PM

மூத்த குடிமக்களை காக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பெற்றோர், மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ல் வகுக்கப்பட்டது. இதன்படி, பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு பராமரிப்பு, நலனை பேண அரசியலமைப்பின் கீழ், உத்தரவாதம் அளிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டவாறு, சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. தமிழ்நாடு பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு விதிகளும் கடந்த, 2009ன்படி, உருவாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து மூத்த குடிமக்கள், பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெற, ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர்கள், பராமரிப்பு அலுவலர்களாகவும், சமரச அலுவலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மூத்த குடிமகன் அல்லது பெற்றோர் தனது சொந்த வருவாயிலோ அல்லது அவருக்குச் சொந்தமான சொத்திலிருந்தோ தன்னைப் பராமரிக்க முடியாத நிலையில், சட்டத்தின் பிரிவு, 5-ன் கீழ், தனது குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு.
மாதாந்திர வாழ்க்கைப்படி வேண்டி, இச்சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், 90 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.
குழந்தைகள் அல்லது உறவினர்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால், தீர்ப்பாயம் அபராதம் விதிக்கலாம். மூத்த குடிமக்களின் பராமரிப்பு, செலவினங்களுக்காக ஒவ்வொரு மாத உதவித் தொகையின் முழு அல்லது எந்தப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள உத்தரவிடலாம். ஒரு மாதம் வரையிலோ அல்லது பணம் செலுத்தப்படும் வரையிலோ நீட்டிக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கலாம். அதிகபட்ச பராமரிப்பு வாழ்க்கைப்படி மாதம் ரூ.1,000- விட அதிகமாக நிர்ணயிக்ககூடாது.
தீர்ப்பாயம், விசாரணை நிலுவையில் இருக்கும் போது, முதியோருக்கு இடைக்கால பராமரிப்புக்காக மாதாந்திர உதவித்தொகையை வழங்க, குழந்தைகள் அல்லது உறவினர்களுக்கு உத்தரவிடலாம்.
மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பான நபர்கள் மூத்த குடிமக்களை கைவிட்டால், அத்தகைய நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.