/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் திருட்டு - கொள்ளை எதிரொலி :துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
/
தொடர் திருட்டு - கொள்ளை எதிரொலி :துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
தொடர் திருட்டு - கொள்ளை எதிரொலி :துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
தொடர் திருட்டு - கொள்ளை எதிரொலி :துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
ADDED : செப் 06, 2024 02:33 AM
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த குற்ற சம்பவங்கள் காரணமாக, நள்ளிரவு நேரங்களில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து மேற்கொண்டு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக மாவட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட தொடர் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தது. உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதைத்தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்கவும், போலீசார் மீது தாக்குதல் முயற்சி நடப்பதால், இரவு ரோந்து மேற்கொள்ளும் போலீசார் முதல் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,உள்ளிட்டோர் துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொள்ள, கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, உடுமலை, மடத்துக்குளம், அமராவதி, கணியூர், குடிமங்கலம், தளி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், இரவு ரோந்து பணியிலுள்ள போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மாவட்ட எல்லை பகுதி, முக்கியமான சந்திப்பு, பிரதான ரோடுகளில் போலீஸ் குழுக்கள் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும் விதமாக வந்த டூவீலர், கார், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை பலத்த சோதனைக்குப்பின், முழு விபரங்களை பெற்ற பின்னே அனுப்பி வைத்தனர்.
இந்த ரோந்து வரும் நாட்களில் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.