sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேக்கம்; சுகாதாரம் பாதிப்பு

/

அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேக்கம்; சுகாதாரம் பாதிப்பு

அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேக்கம்; சுகாதாரம் பாதிப்பு

அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேக்கம்; சுகாதாரம் பாதிப்பு


ADDED : பிப் 10, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசுத்தமான நிழற்கூரை


கோவில்பாளையத்தில் இருந்து செங்குட்டைபாளையம் செல்லும் ரோட்டின் அருகே உள்ள, பயணியர் நிழற்கூரை முழுதும் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த போஸ்டர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி இந்த நிழற்கூரை முன்பாக, கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இதை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.

- முருகன், கோவில்பாளையம்.

பள்ளி சுவர் சேதம்


பொள்ளாச்சி, சமத்துார்ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி சுற்றுச்சுவரில், ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சுற்றுச்சுவரில் பெரும் உடைப்பு ஏற்படுவதற்குள், உடனடியாக சீரமைக்க வேண்டும்.

- அந்தோணி, பொள்ளாச்சி.

ரோட்டில் கழிவு நீர்


கோட்டூர் ரோடு, அங்கன்வாடி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே, ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்காமல் வெளியேறவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும் நடவக்கை எடுக்க வேண்டும்.

- ராஜ், பொள்ளாச்சி.

ரோடு படுமோசம்


சேரிபாளையத்திலிருந்து குருவேகவுண்டம்பாளையம் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.

- மாரிமுத்து, நெகமம்.

குப்பையால் இம்சை


பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் புளியம்பட்டி, ராசக்காபாளையம் போன்ற பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில், ஆங்காங்கே குப்பை கொட்டப்படுகிறது. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

- ராம்குமார், பொள்ளாச்சி.

திறப்பது எப்போது?


உடுமலை திருமூர்த்தி நகரில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அரசின் நிதி வீணாகிறது. எனவே, இந்த வீடுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜன், உடுமலை.

சுகாதார சீர்கேடு


உடுமலை, பூக்கடை சந்து பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. குப்பைக்கழிவுகள் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

- ராதா, உடுமலை.

குப்பை எரிப்பு


உடுமலை, சின்னவீரம்பட்டி பகுதியில் குப்பைக்கழிவுகளை ரோட்டோரத்தில் எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலையில் புகை பரவுகிறது. கழிவுகளில் பிளாஸ்டிக் எரிவதால் அருகில் குடியிருக்கும் பகுதியினருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது.

- சிவக்குமார், உடுமலை.

நோய் அபாயம்


உடுமலை, வடபூதிநத்தம் பகுதியில் ரோட்டோரம் முழுவதும் திறந்த வெளிக்கழிப்பிடமாக உள்ளது. இதனால் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுகாதாரமில்லாமல் நோய் பரவும் பகுதியாகவும் மாறுகிறது. கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது.

- மோகன், வாளவாடி.

தெருவிளக்குகள் எரிவதில்லை


உடுமலை, ஐஸ்வர்யா நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் வீதியில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். முதியவர்கள் மாலையில் நடைபயிற்சி செய்வதற்கும் சிரமப்படுகின்றனர்.

- பிரபு, உடுமலை.

துார்வார வேண்டும்


உடுமலை நகராட்சி ஸ்ரீ நகரில் பூங்காவை ஒட்டி மழைநீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் துார்வாராததால், குப்பை, கழிவுகள் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே, நகராட்சியினர் கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.






      Dinamalar
      Follow us