ADDED : செப் 23, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கோவை: புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிளாரா குணபூரணி, எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினார். பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல், மனிதநேயத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆலோசகர்கள் நித்யா, பரமேஸ்வரி, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் அக்பர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
