/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் 3 மாதத்தில் முடிக்கப்படும்
/
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் 3 மாதத்தில் முடிக்கப்படும்
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் 3 மாதத்தில் முடிக்கப்படும்
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் 3 மாதத்தில் முடிக்கப்படும்
ADDED : மே 09, 2024 04:50 AM

கோவை : கோவை, ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) துவக்கியது. அணுகு சாலைக்கு போதிய இடம் ஒதுக்காததால், அப்பகுதி பொதுமக்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், மேம்பால வேலை பாதியில் நின்றது. 2021ல் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது. பின், தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
மேம்பாலப் பணி நிறுத்தி வைக்கப்பட்ட தால், நிலுவை பணிகள் மேற்கொள்ள, மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஓடுதளத்தில் மூன்று 'டெக் ஸ்லாப்', ஒண்டிப்புதுார் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் ஒண்டிப்புதுார் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் தலா, 75 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை மற்றும் சேவைச்சாலை, நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைக்க, ரூ.8.80 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
லோக்சபா தேர்தல் காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளதால், ஆக., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.