/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
/
சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
ADDED : ஆக 09, 2024 02:48 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணம் அதிக அளவில் கை மாறுகிறது என, தகவல் கிடைத்ததன் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5:30 மணிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல், விசாரணை நடத்தினர்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி கூறியதாவது:
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணம் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. எனினும், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம். அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.