ADDED : ஜூன் 30, 2024 12:57 AM

கோவை;கோவை கோல்ப் கிளப் மற்றும் சிறுதுளி சார்பில், செட்டிபாளையத்தில் உள்ள தரிசு நிலத்தில், கிளப் நிறுவனத் தலைவர் ராஜகோபால் நினைவாக, 'கேப்டன் வனம்' என்ற பெயரில், 3285 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கோவை கோல்ப் கிளப்பில் உள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், மியாவாக்கி முறையில் ் பல்வேறு வகையான பழ மரங்கள், பூமரங்கள், மரபு சார்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
பலவகையான மரபு சார்ந்த மரக்கன்றுகளை, நெருக்கமாக நடுவது மூலம், பல்லுயிர் பெருக்கம் உருவாக்கும் என்றும், அடர்த்தியான மரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கும், பறவைகள் கூடுகள் அமைக்கவும், உயிர்ச்சூழல் உருவாகவும் வாய்ப்பாக அமையும் எனவும், சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை கோல்ப் கிளப் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சிறுதுளி அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.