/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மார்ட் சிட்டி' குளக்கரைகள் இனி 'பளிச்' களத்துக்கு வந்த பராமரிப்பு இயந்திரங்கள்
/
'ஸ்மார்ட் சிட்டி' குளக்கரைகள் இனி 'பளிச்' களத்துக்கு வந்த பராமரிப்பு இயந்திரங்கள்
'ஸ்மார்ட் சிட்டி' குளக்கரைகள் இனி 'பளிச்' களத்துக்கு வந்த பராமரிப்பு இயந்திரங்கள்
'ஸ்மார்ட் சிட்டி' குளக்கரைகள் இனி 'பளிச்' களத்துக்கு வந்த பராமரிப்பு இயந்திரங்கள்
ADDED : மே 15, 2024 01:03 AM

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அழகூட்டப்பட்ட குளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் இயந்திரங்கள், ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள், நடைபாதை, படகு நிலையம் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்கள் பற்றாக்குறை, போதிய உபகரணங்கள் இல்லாததால் குளங்கள் பராமரிப்பில் தொய்வு இருந்தது.
இந்நிலையில், குளங்களை பராமரிக்க சிறிய 'எலக்ட்ரிக்' ரோந்து வாகனம், நடைபாதை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று உக்கடம் பெரியகுளத்தில் இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தனர்.
'ஸ்மார்ட் சிட்டி' பொது மேலாளர் பாஸ்கரன் கூறியதாவது:
நடைபாதையில் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவை அகற்றும் இயந்திரம், தண்ணீரை பீய்ச்சி அடித்து தரையை சுத்தம் செய்யும் இயந்திரம், சிறிய எலக்ட்ரிக் ரோந்து வாகனம் உள்ளிட்டவை ஏழு குளங்களிலும் பயன்படுத்தப்படும்.
மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தில் இருந்து, 1.5 அடி உயரத்தில் நின்றுகொண்டே சுற்றிலும் நடக்கும் பணிகளை கண்காணிக்க முடியும். மேலும், தோட்டக்கலை நிபுணர், எலக்ட்ரீசியன், பராமரிப்பாளர் என மூன்று மாதங்களுக்குள், 315 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.