/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு
/
எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு
எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு
எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு
ADDED : ஜூலை 04, 2024 05:17 AM
கோவை: கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீதான மறுவிசாரணை, மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பான, 72 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மனுக்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும், தீர்வு காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.