/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தல்; நான்கு பேர் கைது
/
ரேஷன் அரிசி கடத்தல்; நான்கு பேர் கைது
ADDED : செப் 11, 2024 10:58 PM
போத்தனூர் : கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசியை, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் மேம்பாலம் அருகே, பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், 9ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனையிட்டபோது, ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. ஆட்டோவுடன், அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ டிரைவரான மாச்சநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனன், 40, ஆட்டோ மற்றும் அரிசியின் உரிமையாளரான சுந்தராபுரம், முத்தையா நகரை சேர்ந்த இமயனாதன்,44 ஆகியோரை கைது செய்தனர்.
* நேற்று முன்தினம், மதுக்கரை மிலிட்டரி கேம்ப் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஆட்டோ ஒன்றிலிருந்து மாருதி ஆம்னி காருக்கு, மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்த இருவரை விசாரித்தனர். கேரள மாநிலம், வேலந்தாவளம், சுண்ணாம்புக்கல் தோடு பகுதியை சேர்ந்த அமலோற்பவம், கோவை, பீளமேடை சேர்ந்த லோகேஷ், 27 என தெரிந்தது.
இருவரும் பீளமேடு, காந்திபுரம் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளா, கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த ஜாகீர் ஹுசேன், 45 என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்பதும் தெரியவந்தது.
வாகனத்திலிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி, இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர்.