sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாம்பும், தேளும் வீட்டுக்குள்ளே வருகின்றன! பராமரிப்புக்கு ஏங்குது கே.கே.புதுார் சர்ச் ரோடு பூங்கா

/

பாம்பும், தேளும் வீட்டுக்குள்ளே வருகின்றன! பராமரிப்புக்கு ஏங்குது கே.கே.புதுார் சர்ச் ரோடு பூங்கா

பாம்பும், தேளும் வீட்டுக்குள்ளே வருகின்றன! பராமரிப்புக்கு ஏங்குது கே.கே.புதுார் சர்ச் ரோடு பூங்கா

பாம்பும், தேளும் வீட்டுக்குள்ளே வருகின்றன! பராமரிப்புக்கு ஏங்குது கே.கே.புதுார் சர்ச் ரோடு பூங்கா


ADDED : ஆக 19, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவுநீர் தேக்கம்


திருச்சி ரோடு, சிங்காநல்லுார், ஜெய்சாந்தி தியேட்டர் அருகே கால்வாயில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக இருப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது.

- கோபி, சிங்காநல்லுார்.

புதர்மண்டிய பூங்கா


கே.கே.புதுார், கே.ஜி.லேஅவுட், சர்ச் ரோட்டில் உள்ள பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. புதர்மண்டி குட்டி காடு போல உள்ளது. இதனால், பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் அருகிலுள்ள குடியிருப்புக்குள் படையெடுக்கின்றன.

- குமார், கே.கே.புதுார்.

தெருவிளக்கு பழுது


சத்தி மெயின் ரோடு, சரவணம்பட்டி, 4வது வார்டு, ஸ்ரீவிலாஸ் ஸ்வீட்ஸ் கடை எதிரே, 'பி-16' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 15 நாட்களாக, தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் செல்ல சிரமமாக உள்ளது. விளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.

- ஆர்த்தி, சரவணம்பட்டி.

குடியிருப்பு நடுவே புதர்காடு


கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 38வது வார்டு, குருசாமி நகர், 7வது கிராஸ் பகுதியில், காலியிடத்தில் 10 அடிக்கும் மேல் புதர் செடிகள், முள் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், குடியிருப்பு பகுதியில், விஷ உயிரினங்கள் அடிக்கடி வருகின்றன.

- விஜயகுமார், குருசாமி நகர்.

பலி கேட்கும் பள்ளங்கள்


இடையர்பாளையம், சரவணா நகரில் சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. இரவு நேரங்களில், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஹரிஷ், சரவணா நகர்.

குழந்தைகளை துரத்தும் நாய்கள்


செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, சங்கமம் நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. சாலையில் அச்சத்துடனேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.

- முருகானந்தம், செட்டிபாளையம்.

முறையிட்டும் பலனில்லை


சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் காலனியில், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்கக் கோரி, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

- பிருந்தாவன் காலனி, உப்பிலிபாளையம்.

ஒரு மாதமாக எரியா விளக்கு


விளாங்குறிச்சி ரோடு, ராகவேந்திரா அவென்யூ வீதியில், கம்பம் எண் 14ல், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. விளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.

- ரமேஷ், விளாங்குறிச்சி ரோடு.

கொசுத்தொழிற்சாலை


சவுரிபாளையம், இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் மருந்தகம் பின்புறம், சாக்கடை கால்வாய்கள் மூடியில்லாமல் திறந்தநிலையில் உள்ளது. ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.

- மோகன், சவுரிபாளையம்.

கால்வாயை அடைக்கும் குப்பை


காந்திமாநகர், 25வது வார்டு, போலீஸ் ஸ்டேஷன் அருகில், கால்வாயோரம் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. காற்றில் பறக்கும் குப்பை கால்வாயிலும் விழுகிறது. மழை சமயங்களில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால், தண்ணீர் குடியிருப்புக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.

- பாஸ்கரன், காந்திமாநகர்.

குழிகள் நிறைந்த ரோடு


மருதமலை ரோடு, நவாவூர் பிரிவு ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. குழிகள் நிறைந்த சாலையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரும் விபத்துகள் நடக்கும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.

- சண்முகம், பொம்மண்ணம்பாளையம்.

வேகத்தடை வேண்டும்


வடவள்ளி, நவாவூர் கியூரியோ கார்டன், சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து, தொண்டாமுத்துார் சாலை சென்றடையும் பகுதியில், அதிக விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.

- முத்துக்குமார், வடவள்ளி.

படையெடுக்கும் பாம்புகள்


கோவைப்புதுார், 90வது வார்டு, சரஸ்வதி நகர் பகுதியில், டிரான்ஸ்பார்மர் சுற்றிலும், புதர் அடர்த்தியாக வளர்ந்து இருக்கிறது. அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் வீட்டிற்குள் படையெடுக்கின்றன.

- பிரபாகரன், கோவைப்புதுார்.






      Dinamalar
      Follow us