/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூக தணிக்கை ஒருங்கிணைப்பு; 10 ஊராட்சிகளில் கூட்டம்
/
சமூக தணிக்கை ஒருங்கிணைப்பு; 10 ஊராட்சிகளில் கூட்டம்
சமூக தணிக்கை ஒருங்கிணைப்பு; 10 ஊராட்சிகளில் கூட்டம்
சமூக தணிக்கை ஒருங்கிணைப்பு; 10 ஊராட்சிகளில் கூட்டம்
ADDED : செப் 17, 2024 10:18 PM
அன்னுார் : கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், சமூகத்தணிக்கை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 2023 ஏப்., 1 முதல், 2024 மார்ச் 31 முடிய நடந்த பணிகள்; 2016- 22 வரை, பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூக தணிக்கை, செப்., 2 முதல், கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும், 10 ஊராட்சிகளில் நடக்கிறது.
அன்னூர் ஒன்றியத்தில் கஞ்சப்பள்ளி, சூலூரில் கே.மாதப்பூர், சுல்தான் பேட்டையில் இடையர்பாளையம், காரமடையில் பெள்ளாதி, பெரியநாயக்கன் பாளையத்தில் குருடம்பாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், கடந்த 16ம் தேதி சமூக தணிக்கை துவங்கியது. கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
தணிக்கையாளர் கனகராஜ் பேசுகையில், ''ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்ட ஆவணங்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.
ஊராட்சி தலைவர் சித்ரா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். மாலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
இன்றும், நாளையும், ஊராட்சியில் கடந்தாண்டு செய்யப்பட்ட பணிகளை கள ஆய்வு செய்தல், அளவீடு செய்தல், வீடுகளை பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு, கஞ்சப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்க, ஊரக வளர்ச்சி துறை அழைப்பு விடுத்துள்ளது.