/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை
/
பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை
பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை
பகலில் சூரியசக்தி, இரவில் காற்றாலை; மின் வாரியத்துக்கு உதவும் இயற்கை
ADDED : ஜூன் 12, 2024 04:59 AM

சென்னை : தமிழக மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி ஆகியவை 11 கோடி யூனிட்கள் கொடுத்து, முதலிடத்தில் உள்ளன.
கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏப்ரல், மே மாதங்களில், தமிழகத்தில் மின் நுகர்வு, தினமும் 40 கோடி யூனிட்களை தாண்டியது.
இதை பூர்த்தி செய்வதற்கான மின் உற்பத்தி, மின் கொள்முதல் மேலாண்மை பணிகளை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மேற்கொள்கிறது.
அந்த மையத்தின் விபரப்படி, பல்வேறு தனியார் நிறுவனங்கள், 9,019 மெகா வாட் திறனில் காற்றாலை; 8,116 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
தற்போது மின் நுகர்வு, 35 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. மே முதல், காற்றாலை சீசன் துவங்கியுள்ளது. சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெளிச்சமே முக்கியம்; வெப்பம் அல்ல. தற்போது, சூரியசக்தி மின்சாரமும் அதிகம் கிடைக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் காற்றாலைகளில், 7.69 கோடி யூனிட்களும்; சூரியசக்தி மின் நிலையங்களில், 3.75 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது.
அன்றைய நாளின் மின் நுகர்வு, 34.76 கோடி யூனிட்கள். அதை பூர்த்தி செய்ததில், 11.44 கோடி யூனிட்களுடன் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, மத்திய அனல், அணுசக்தி மின்சாரத்தின் பங்கு, 9.42 கோடி யூனிட்களாகவும்; மின் வாரிய அனல் மின்சாரத்தின் பங்கு, 7.64 கோடி யூனிட்களாகவும் உள்ளன. மீதி மின்சாரம், தனியார் எரிவாயு, அனல் மின்சார கொள்முதலாக உள்ளன.