/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு குறுமைய கபடி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
/
தெற்கு குறுமைய கபடி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
தெற்கு குறுமைய கபடி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
தெற்கு குறுமைய கபடி போட்டி அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : செப் 11, 2024 12:26 AM
கோவை:பள்ளிகளுக்கு இடையேயான தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள், கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரியின் முதன்மை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் கோவிந்தராஜ், தங்கவேல் போட்டிகளை துவக்கிவைத்தனர்.
19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், கிரசன்ட் மெட்ரிக் பள்ளி, குனியமுத்துார் அரசு மேல்நிலை பள்ளியையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குனியமுத்துார் அரசு மேல்நிலை பள்ளி, சுண்டக்காமுத்துார் அரசு மேல்நிலை பள்ளியையும் வென்றது.
தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியை வென்றது.
19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான போட்டியில், எஸ்.ஆர்.வி., மெட்ரிக் பள்ளி, குளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை வென்றது.
அதே போல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பண்டிட் நேரு மெட்ரிக் பள்ளி, வி.எல்.பி., ஜானகியம்மாள் பள்ளியையும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வி.எல்.பி., ஜானகியம்மாள் பள்ளி, குளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியையும் வென்றது. கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு,கோப்பைகள் வழங்கப்பட்டன.