/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏற்றுமதி சாதனைக்கு தென்மண்டல விருது
/
ஏற்றுமதி சாதனைக்கு தென்மண்டல விருது
ADDED : ஜூலை 23, 2024 11:51 PM
கோவை:கோவையில் உள்ள கே.யூ.,சுடலைமுத்து அண்டு கம்பெனி நிறுவனத்திற்கு, அதிக இயந்திரங்களை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்ததற்காக, இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின், 2019-20ம் ஆண்டிற்கான தென்மண்டல விருது கிடைத்துள்ளது.
இந்நிறுவனம் பேப்பர் கோன், டியூப் முதலியவற்றை உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்களை கடந்த, 1970ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது.அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட 70 நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்து வருகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த விழாவில், மத்திய அரசின் வர்த்தகத்துறை இணைச்செயலாளர் விமல் ஆனந்த்,ஏற்றுமதி விருதை வழங்க, சுடலைமுத்து அண்டு கம்பெனி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் பெற்றுக்கொண்டார்.
ஐ.எஸ்.ஓ.. தரச்சான்றிதழ் பெற்றுள்ள இந்நிறுவனம், இதுவரை 24 ஏற்றுமதி விருதுகளை வென்று, சாதனை படைத்துள்ளது.

