/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விண்கல பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் இந்திய விண்வெளி விஞ்ஞானி மோகன் பேச்சு
/
விண்கல பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் இந்திய விண்வெளி விஞ்ஞானி மோகன் பேச்சு
விண்கல பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் இந்திய விண்வெளி விஞ்ஞானி மோகன் பேச்சு
விண்கல பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் இந்திய விண்வெளி விஞ்ஞானி மோகன் பேச்சு
ADDED : ஆக 10, 2024 10:24 PM

கோவை:கோவையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன நாள் விழா நேற்று நடந்தது. பி.எஸ்.ஜி., குழுமத்தின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பிருந்தா வரவேற்றார். சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி, திட்ட இயக்குனர் மோகன் பேசியதாவது:
விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சந்திராயன் நிலவில் இறங்கிய ஆக., 23ம் தேதியை, இந்திய விண்வெளி நாளாக அறிவிக்க, அரசு தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து, செயற்கை கோளை செலுத்தும் ராக்கெட்டுகள் இல்லை.
தற்போது நான்கு ராக்கெட்டுகளை இந்தியா கொண்டுள்ளது. 500 கிலோ முதல், 4 டன் எடை வரை செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் 15ல் ஒரு செயற்கை கோளை ஏவ உள்ளது.
சுய சார்பு கொண்ட எரிபொருளை உருவாக்கி, பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 250 டிகிரி சென்டிகிரேடுக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது.
இஸ்ரோ உருவாக்கும் செயற்கை கோள், ராக்கெட்டுகள் அனைத்துக்கும் 85 சதவீத பொருட்கள் உள்நாட்டு தொழிற்சாலைகளே உற்பத்தி செய்கின்றன.
விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, மனிதர்கள் விண்வெளியில் பயணிப்பதற்கும், நிலவுக்கு சென்று வருவதற்கும் அரசு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. 'ககன்யா' என்ற ஆளில்லா விண்கலனை விண்ணில் செலுத்தி, பின் தரையிறக்கும் ஆய்வில், வெற்றி கண்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
விழாவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கவுரிசங்கர் ராஜம், வெங்கட்ராமன் ஸ்ரீராம், மயில்வாகனன், அலர்மேலு மங்கை, ஆடம் ஆன்டனி சின்கிளர், ராம்குமார் உள்ளிட்டோருக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.

