/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா
/
நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா
ADDED : ஆக 15, 2024 11:55 PM
கோவை, : கோவை ஓசூர் சாலை ஜி.டி.நாயுடு டவரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆக.,19 ல் துவங்கி செப்., 6 வரை நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் போன்றவை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் முதலீட்டு மானியம் 1.50 கோடி வரை பெற்று தரப்படும். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்த, விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக வட்டி மானியம் வழங்கப்படும். இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில், 50 சதவீத சலுகை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 87543 30535 / 94440 29265 மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

