/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்; அவகாசம் இல்லையென புகார்
/
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்; அவகாசம் இல்லையென புகார்
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்; அவகாசம் இல்லையென புகார்
நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்; அவகாசம் இல்லையென புகார்
ADDED : மார் 06, 2025 11:48 PM
அன்னுார்; அன்னுார் உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 'வருகின்ற 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்தக் கூட்டத்தில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதை களைவது குறித்தும் பேச வேண்டும்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்து வரும் கிராம சபை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கூட்டம் நடந்ததற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்,' வழக்கமாக ஏழு நாட்களுக்கு முன்னதாகவே கிராம சபை கூட்டம் குறித்து அறிவிக்கப்படும்.
தண்டோரா அல்லது ஒலிபெருக்கி வாயிலாக அனைத்து குக்கிராமங்களிலும் தகவல் தரப்படும். வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் கொடுத்து கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு விடப்படும்.
தற்போது 8ம் தேதி கூட்டம் நடத்த 6ம் தேதி மாலை தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தகவல் செல்லாது.
இந்த கிராம சபை கூட்டம் வெறும் பெயரளவுக்கு நடைபெறும்,' என்றனர்.